

Inactive· since Apr 16, 2026
- 104
- days it ran
- 0
- relaunches
Ad copy
ஊட்டி குளிர் மைனஸ் டிகிரியில் உறைந்து போயிருக்க, சொட்டருக்குள், அடர்த்தியான கம்பளிக்குள் சுருண்டிருந்தாள் சாருமதி. நேரம் ஆறுமணியைக் கடந்து ஓடிக் கொண்டிருக்க, கண்களுக்கு அது புலன் ஆனாலும் எழுந்துகொள்ள மனம் வரவே இல்லை. இப்பொழுது எழுந்து கொள்ளவில்லை என்றால், அலுவலகத்துக்குச் செல்ல தாமதமாகும் என புத்தி இடித்துரைக்க, கம்பளிக்குள் இருந்து வெளியே வந்தாள். கைகளை பரபரவென தேய்த்துக் கொண்டவள், அதை கன்னத்தில் வைத்துக் கொண்டாள். “ஹப்பா, என்ன குளிர்... இந்த வருஷம் குளிர் கொஞ்சம் அதிகம்தான்” வாய்விட்டே சொன்னவள், எழுந்து கிச்சனுக்குப் போனாள். இரவில் அலுப்பின் காரணமாக சிங்கில் போடப்பட்டிருந்த பாத்திரங்கள் அவளைப் பார்த்து புன்னகைக்க, ‘ஹையோ’ என்று இருந்தது. “ஏன் சாரு இப்படி பண்ற?” தன்னைத்தானே திட்டிக் கொண்டவள், காபி பாத்திரத்தை கழுவிவிட்டு, வேகமாக டீ தயாரித்தாள். வாங்கி வைத்திருந்த பால் ஃப்ரிஜில் இருக்கவே, அதை வாங்க வெளியே செல்ல வேண்டி இருக்கவில்லை. அந்த டீ நுரைபொங்க கொதிக்கவே, அதில் சர்க்கரையைக்கலந்து எடுத்தவள், மீண்டுமாக படுக்கையில் வந்து அமர்ந்து, காலை மடக்கி படுக்கையில் வைத்துக் கொண்டாள். அந்த குளிருக்கு இதமாக, டீ சூடாக தொண்டைக்குழிக்குள் இறங்க, அத்தனை புத்துணர்ச்சியாக உணர்ந்தாள். “வாவ்... டிவைன்...” சொர்க்கத்தை அனுபவிக்கும் உணர்வில் அப்படியே சில நொடிகள் இருந்தவள், மீண்டுமாக அந்த சூடான டீயைப் பருகினாள். ஆவி பறக்க, அதன் சுவையும், மணமும் அந்த காலை வேளையை அவளுக்கு அவ்வளவு அழகாக்கிக் கொடுத்தது. முழுதாக பத்து நிமிடங்கள் செலவழித்து அந்த டீயின் சுவையில் லயித்து இருந்தவள், அந்த நிமிடங்களை ஆழ்ந்து அனுபவித்து மகிழ்ந்தாள். இப்படியான சின்ன விஷயங்களைக் கூட அவள் ரசிப்பதால் தான், அவளால் இந்த தனிமையை விரட்ட முடிந்தது.
நிலவே மலர்ந்திடு...
பகுதி – 1. ஊட்டி குளிர் மைனஸ் டிகிரியில் உறைந்து போயிருக்க, சொட்டருக்குள், அடர்த்தியான கம்பளிக்குள் சுருண்டிரு.....
SEE DETAILSLike this ad? Make it yours.
Crush rebuilds this exact creative around your product — your brand, your colors, your offer — in about a minute.







